சென்னை: வடகிழக்குப் பருவமழை பெய்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் தடையற்ற சேவைகளை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: அரசு மருத்துவ மனைகளில் 7 நாட்களுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன், அத்தியாவசிய மருந்துகள், ஓ.ஆர்.எஸ்., பாம்புக்கடி விஷமுறிவு மருந்துகளை இருப்பு வைக்கவும், தடையற்ற மருத்துவ சேவைகளை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் மின்சாரம், உயிர்காக்கும் உபகரணங்கள் தடையின்றி செயல்படுவதை உறுதி செய்யவும், தவிர்க்க முடியாத காரணங்களால் மின் தடை ஏற்பட்டாலும், ஜெனரேட்டர் மூலம் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய நேரத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழையை எதிர்கொள்ள அனைத்துத் துறைகளும் தயாராக உள்ளன. இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
