”தேவாவின் குடும்பத்தாருக்கு சூர்யா ஆறுதல்”; உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த சனிக்கிழமை (17-10-26) அன்று உயிர் இழந்தார். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, இவரது உடலுக்கு முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.  

இதனிடையே, ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று (18-10-26) அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. நடிகர் சூர்யா அந்த சமயத்தில் ஊரில் இல்லாததால், அவரால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. 

இந்நிலையில், தற்போது சென்னை வந்த சூர்யா இசையமைப்பாளர் தேவாவின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், தேவாவின் மகன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.  

கதாநாயகனாக அறிமுகமான ’நேருக்கு நேர்’ படம் உட்பட பல்வேறு சூர்யா படங்களுக்குத் தேவா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.