வாஷிங்டன்: அமெரிக்காவின் உட்டா மாகாணம் சால்ட் லேக் சிட்டியைச் சேர்ந்தவர் ஜாக் வைஸ், 30. உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.
பனிக்கட்டி உருவாதலின் அறிவியல் கோட்பாடுகள் குறித்த இவரது ஆராய்ச்சியை நோபல் பரிசு குழுவே பாராட்டியுள்ளது. கடந்த, 2024ல் முனைவர் பட்டப் படிப்பை முடித்த ஜாக் வைஸ், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தேசிய ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானி வேலை தேடி அலைந்துள்ளார். ஆனால் சரியான வேலை கிடைக்காததால் தான் படித்த படிப்பை தாண்டி வேறு துறைகளிலும் வேலை தேடியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அனுப்பிய வேலைவாய்ப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை மட்டுமே 2,300-ஐ தாண்டியுள்ளதக வெளிவந்துள்ள தகவல் உலகக் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக வேலை வாய்ப்புகள் தொடர்பாக, அக்., மாதம் வெளியான புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் இந்தாண்டு ஏப்ரலில் இருந்து ஜூன் மாதத்துக்குள் வேலை வாய்ப்புகள், 23 சதவீதம் குறைந்துள்ளது.
