சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தை பொது – தனியார் பங்களிப்பு முறையில் மேம்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விமான நிலைய ஆணையத்திற்கு பதிலாக சென்னை விமான நிலையத்தை நிர்வகிக்கும் பணியை வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்க கோரி முதல்வர் விஜய் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு ரகசிய கடிதம் எழுதி இருந்தார். இதன் அடிப்படையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
