சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அமைச்சர் வெங்கடரமணன்

சென்னை: உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன் கூறியதாவது: அதிகப்படியான மக்கள் பயன்படுத்தும் சன்னரக அரிசி, 25,000 டன் கொள்முதல் செய்து கிலோ, 30 ரூபாய்க்கு விற்க, கூட்டுறவு கடைகள் மற்றும் அமுதம் பல்பொருள் அங்காடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சில கடைகளுக்கு குறைவாக அனுப்பப்பட்டு இருக்கலாம். எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

சன்னரக அரிசியை, ரேஷன் அரிசி என கூறுவது தவறு; அப்படி கிடையாது. ரேஷன் அரிசி என்பது பொது வகை. அது, குண்டு வகையை சேர்ந்தது. தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்யப்படும் நெல், அரவை ஆலைகளில் அரிசியாக மாற்றப்பட்டு, ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.

இந்த அரிசி அப்படி அல்ல. இது, சந்தையில் வாங்கப்பட்டு, தனியார் அரவை ஆலைகளில் அரிசியாக வாங்கப்பட்டு வழங்கப்படுகிறது. அரிசி தரத்தை ஆய்வு செய்த பின், மக்களுக்கு விற்க கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. உணவு பொருட்கள் தரமாக மக்களுக்கு கிடைக்க ஆய்வு செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link