-நமது நிருபர்-
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று (அக் 21) முதல் அக்டோபர் 23ம் தேதி வரை 3 நாட்களுக்கு பருவமழை தீவிரம் அடைய வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. சாலைகளில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. நுங்கம்பாக்கத்தில் 10.7 செ.மீ, தரமணியில் 9.5 செ.மீ, பாம்பனில் 5.5 செ.மீ, கோவையில் 3.9 செ.மீ, கன்னியாகுமரியில் 3.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழை காரணமாக இன்று (அக் 21) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் பின்வருமாறு:
* சென்னை,
* திருவள்ளூர்,
* காஞ்சிபுரம்,
* செங்கல்பட்டு
* ராணிப்பேட்டை
