ஜோனிடா காந்திக்கு காதல் தோல்வியா?: இன்ஸ்டா ஸ்டோரியில் சோகம், வாசலில் விட்டுப் போனது யார்?

ஜோனிடா பாடல்கள்: 13 ஆண்டுகளாக படங்களில் பாடல்கள் பாடி வருபவர் கனடாவை சேர்ந்த பஞ்சாபி பெண்ணான ஜோனிடா காந்தி. மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியான ஓ காதல் கண்மணி படம் மூலம் கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான். தமிழில் அவர் பாடிய முதல் பாடலான மென்டல் மனதில் சூப்பர் ஹிட்டானது. அதில் இருந்தே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த பாடகிகளில் ஒருவராகிவிட்டார் ஜோனிடா காந்தி. ஏ. ஆர். ரஹ்மான் தவிர்த்து ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி இமான், சாய் அப்யங்கர் உள்ளிட்டோர் இசையிலும் பாடியிருக்கிறார்.

ஜோனிடா காதல் முறிவு?: இந்நிலையில் ஜோனிடா காந்தி யாரையோ காதலித்து பிரேக்கப் ஆகிவிட்டது போன்று என ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான டூட் படத்தில் தான் பாடிய கண்ணுக்குள்ள பாடலில் வரும் விட்டுப் போன வாசலிலே வரிகள் வருவதை இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்தார். அந்த வரிகள் மட்டும் அதில் இருக்கும் சோகத்தை பார்த்துவிட்டு தான் அய்யோ பாவம் ஜோனிடாவுக்கு லவ் ஃபெயிலியராகிவிட்டதாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

சமூக வலைதளவாசிகள் மேலும் கூறியிருப்பதாவது, யாரை காதலித்தீர்கள் ஜோனிடா?. உங்களை விட்டுப் போன அந்த நபர் யார்?. அவரின் பெயரை சொன்னால் சேர்த்து வைக்க நாங்கள் முயற்சி செய்வோம் அல்லவா?. உங்களை மாதிரி ஒரு ஆளுடன் பிரேக்கப் செய்திருக்கிறார் என்றால் அந்த ஆளுக்கு நிச்சயம் ரசனை சரியில்லை என்றே சொல்ல வேண்டும். விட்டுப் போனவர் போகட்டும் என மூவ் ஆன் பண்ண பாருங்கள் என அறிவுரை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஏன் ஜோனிடா காந்தி?: ஜோனிடா காந்தி பாடகி என்றாலும் முன்னணி நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ் அவருக்கும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் 2.9 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் ஜோனிடா ஒரு பிரைவேட் பர்சன். அதாவது தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் எதுவும் போட மாட்டார். அப்படிப்பட்ட ஆள் சோகமாக ஸ்டோரி போட்டதால் தான் காதல் முறிவு என ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.

ரசிகர்கள் நினைப்பது உண்மையா, இல்லையா என்பதை ஜோனிடா காந்தி உறுதி செய்யவில்லை. அவர் தான் சாய் இசையில் அழகாக பாடிய பாடலில் குறிப்பிட்ட வரிகளை எடுத்து இன்ஸ்டா ஸ்டோரியாக போட அனைத்து உரிமையும் உள்ளது. மேலும் அது குறித்து ரசிகர்களாக எதையாவது யூகித்து யாருடனாவது சேர்த்து பேசினால் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் ஜோனிடாவுக்கு இல்லை.

ஜோனிடா ரசிகர்கள்: ஒரு ஸ்டோரிக்கு ரசிகர்கள் இந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு ஜோனிடா காந்தி மீது அந்த அளவுக்கு அக்கறை இருப்பதையே காட்டுகிறது. ஒரு இசை நிகழ்ச்சியில் ஜோனிடா காந்தி பாடுகிறார் என்று தெரிந்தால் அவரை பார்க்கவே பெரிய கூட்டம் வரும். அப்படி தன் குரலால் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஜோனிடாவுக்கு மனக்கஷ்டம் என்றால் அதை ரசிகர்களால் தாங்க முடியாது.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

எந்த வலிக்கும் இசை ஒரு பெரிய மருந்து ஆகும். அது ஜோனிடாவிடம் இருக்கிறது.அதனால் அந்த இசை மூலம் ஆறுதல் தேடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source link