ஆசிய பாரா விளையாட்டில் வெள்ளி வென்ற கஸ்தூரி; ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்தார் முதல்வர் விஜய்

சென்னை: ஜப்பானில் நடந்து வரும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான வலுதூக்குதலின் 67 கிலோ எடைப் பிரிவில், தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி வெள்ளி வென்றுள்ளார். அவருக்கு முதல்வர் விஜய் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை; வெள்ளிப் பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அவருக்கு, எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், அரசு சார்பில் ரூ.50 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை கஸ்தூரி ராஜாமணி தன்னம்பிக்கை, அயராத உழைப்பு, விடாமுயற்சியால் பெற்ற வெற்றி, இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்

Source link