தமிழ்நாடு அரசு, முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து இன்று (21.10.2026) அதிகாரப்பூர்வ உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. உள்துறை முதன்மைச் செயலாளர் ஏ. கார்த்திக் சார்பில் வெளியிட்டுள்ள இந்த உத்தரவின்படி, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் மூன்று பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு உடனடியாகப் பணியில் இணைய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நிர்வாக மாற்றத்தின்படி, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக பணியாற்றி வந்த சந்தோஷ் குமார், சென்னை குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முன்னதாக இப்பொறுப்பில் இருந்த ரூபேஷ் குமார் மீனா, அங்கிருந்து மாற்றப்பட்டு திருச்சி மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், திருச்சி மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த என். காமினி, சென்னை சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்படைத் தலைவர் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டு புதிய பொறுப்பை ஏற்க உள்ளார்.
