புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அரசு விழா ஒன்றில் அவர் அளித்த பேட்டி;
விஜயபாஸ்கருக்கு பல வித்தைகள் தெரியும். அவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு களத்தில் இறங்க போகிறார். களத்தில் நிற்பதுடன் மட்டும் அல்லாமல் வெற்றியும் பெறுவார். முதல்வர் விஜய்க்கு பின்னால் நின்று அவர் பணியாற்றுவார்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அப்போது நிருபர் ஒருவர் குறுக்கிட்டு, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தான் களம் காண போகிறார் என்று சொல்கிறீர்களே? தேர்தலை ஒட்டிய அரசு விழாவாக இந்த நிகழ்ச்சியை பார்க்கலாமா? என்று கேள்வி எழுப்பினார்.
உடனடியாக அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், ‘ களம் காண்பது என்று சொன்னால் வெற்றிக்காக உறுதுணையாக இருப்பார் என்ற தொனியில் தான் பேசினேனே தவிர வேறு எந்த விஷயத்துடன் ஒப்பிட்டு விடாதீர்கள் என்று கூறினார்.
