ஆசிய விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு கிடைத்த பதக்கங்களின் எண்ணிக்கை 50ஐ தாண்டியது

ஜப்பானின் அய்ச்சி நகோயாவில் நடந்து வரும் ஆசிய பாரா விளையாட்டு போட்டியின் ஆடவர் குண்டு எறிதல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. இந்திய வீரர் ஆயுஷ் வர்மா 8.16 தூரம் குண்டு எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

வில்வித்தை பிரிவில் இந்தியா – சீனா இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 150-141 என்ற கணக்கில் சீன ஜோடி சூசிங் சூ – ஜிங் ஜாவோ இணை தங்கம் வென்றது. இந்திய ஜோடிகளான சீத்தல் தேவி – பயல் நாக்கிற்கு வெள்ளியே கிடைத்தது.

ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் அனுபவ் சவுத்ரி வெண்கலம் வென்றார். மகளிர் 100 மீட்டர் பிரிவில் இந்திய வீராங்கனை சிம்ரன் சர்மா, பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

100 மீ டி47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் கவித் பந்தய தூரத்தை 10.69 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

முகமது மோர்ஷிங்கநாத் 10.72 வினாடிகளில் இலக்கை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.

100 மீ., டி12 ஓட்டப்போட்டியில் இந்தியாவின் சிம்ரன் 12.02 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்.

இதுவரை இந்தியாவுக்கு 14 தங்கம், 21 வெள்ளி,24 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

Source link