தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் மாற்றியமைப்பு: அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் வீட்டுமனை, கட்டிடத் திட்டங்கள் மற்றும் முகவர்களை முறைப்படுத்தவும், வீடு வாங்குவோரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைக்கப்பட்ட அரசு அமைப்பு தான் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம். 

பகலில் கார்ப்பரேட் ஆபீஸர்; நைட்டுல செய்யுற வேலையை பாருங்க; 60 வயதில் ஆட்டம் போடும் டான்சிங் சேலரிமேன்

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினர்களை மறுசீரமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி கடந்த ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார். அதேபோல் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். 

இந்நிலையில், அந்த உறுப்பினர்களை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பணீந்திர ரெட்டி உள்ளார். ஏற்கெனவே ஆணையத்தின் உறுப்பினராக இருந்த நசீர் அகமது நீக்கப்பட்டுள்ளார். 

மேலும், ஏற்கெனவே உறுப்பினராக உள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ரீட்டா ஹரிஷ் தாக்கர், மைதிலி ராஜேந்திரன், ஓய்வு  நீதிபதி கிருபாகரன், ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் சத்திய மூர்த்தி ஆகியோரை புதிய உறுப்பினர்களாக சேர்த்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Source link