நவம்பர் 1 முதல் மாறும் வங்கி மற்றும் பணம் தொடர்பான விதிகள்! உங்கள் பாக்கெட் காலி?

புதிய GST மாதாந்திர ரிட்டன் படிவ மாற்றங்களுக்கான பொதுக் கருத்து (Feedback):

ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரையின்படி, மாதாந்திர ஜிஎஸ்டி ரிட்டன் படிவங்களில் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து வணிகர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறும் நடைமுறையை மத்திய நிதியமைச்சகம் நவம்பர் 1-ம்தேதி முதல் தொடங்குகிறது.

உள்ளீட்டு வரி வரவு (ITC) மற்றும் வரிப் பொறுப்புகளில் ஏற்படும் முரண்பாடுகளைக் குறைத்து, தேவையற்ற நோட்டீஸ்கள் அனுப்பப்படுவதைத் தவிர்க்க இந்த புதிய படிவங்கள் மாற்றி அமைக்கப்படவுள்ளன.

வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைக்கு கட்டணம் அமல்:

அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேற்பட்ட வணிகம் சார்ந்த யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு 0.4% வரை கட்டணம் (MDR) விதிக்கப்படும் என்றும் இக்கட்டணம் வர்த்தகர்களுக்கு மட்டுமே பொருந்தும், சாதாரண நுகர்வோருக்கு யுபிஐ சேவைகள் எப்போதும் போல இலவசமாகவே தொடரும் என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) அறிவித்திருந்தது. கடைகளில் பொருட்​கள் வாங்​கு​வது, கியூஆர் கோடு ஸ்கேன் செய்து பணப் பரி​மாற்​றம் செய்​வது எனப் பொது​மக்​களுக்​கான எந்​தவொரு பரி​வர்த்​தனைக்​கும் எவ்​வித கட்​ட​ண​மும் வசூலிக்​கப்​படாது.

Source link