சஞ்சு சாம்சன் அரைசதம்: இந்திய அணி அபார வெற்றி

கிறிஸ்ட்சர்ச்: தலா 5 டி20, ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக, இந்திய அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி, கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

துவக்க வீரர்களாக ஷெய்பெர்ட், ஆலன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடினர். 5 ஓவரில் 49 ரன் குவித்த போது, ஷெய்பெர்ட் (24) ஆட்டமிழந்தார். ஆலன் (45), மிட்செலும் (28) ரன் குவித்தனர். 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிலிப்ஸ், ஜேக்கப்ஸ் இந்திய பவுலிங்கை துவம்சம் செய்தனர்.

இதனால், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன் குவித்தது. அந்த அணியின் கிளென் பிலிப்ஸ் 82 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.

இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி துவக்கம் முதல் அதிரடி காட்டியது.துவக்க வீரர் அபிஷேக் சர்மா 29, திலக் வர்மா 6 ரன்னில் அவுட் ஆகினர். சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர் ரன் குவித்து இந்திய அணி வெற்றிக்கு உதவினர்.

சஞ்சு சாம்சன் 67, ஸ்ரேயாஸ் ஐயர் 42 ரன்னில் அவுட்டானார்கள். இஷான் கிஷன்1, அக்சர் படேல் 24 ரன் எடுத்தனர்.

இந்திய அணி 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நமன் திர் 42, நிதிஷ்குமார் ரெட்டி 2 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Source link