கோவை: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர் விஜயின் பிரசாரப் பாதையில் மறியலில் ஈடுபட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 9 பேரை போலீஸார் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையின் முன்பு நாதகவினர் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
