நெகடிவ் ரோல் வேணாம், பாசிட்டிவ் தான் வேணும்; அடம் பிடித்த நெப்போலியன்: 6 வருசம் ஞாபகம் வச்சு கமல் கூப்பிட்டு கொடுத்த வெயிட் கேரக்டர்

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து அசத்தியுள்ள நடிகர் நெப்போலியன், கமல்ஹாசன் தன்னுடன் நடிக்க வேண்டும் என்று சொன்னபோது அந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். ஆனால் அடுத்த 6 ஆண்டுகளுக்கு பிறகு அவருடன் இணைந்து விருமாண்டி படத்தில் நடித்துள்ளார். முதலில் நடிக்க மறுத்து, அதன்பிறகு நடித்தது ஏன் என்பது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 

இது குறித்து பேசிய நெப்போலியன், உழைப்பாளி படம் ரிலீஸ்க்குப் பெரிய பிரச்சினை வந்தது. அப்போ ராகவேந்திர மண்டத்தில் ரஜினி ஒரு மீட்டிங் எல்லா நடிகர்களும் மீட்டிங். ரஜினி கமல் இருவரும் அங்க உட்காந்திருக்காங்க. நான் போய் இறங்கி அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அப்போது கமல் என் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு. உங்களின் சீவலப்புரி பாண்டி படம் பார்த்தேன். ரொம்ப அர்ப்புதமான நடிப்பு. 

அந்த கதை எனக்கு தான் வந்தது. நான் விடகனில் அந்த கதையை படித்திருக்கிறேன். நான் தான் நடிக்க வேண்டியது. நான் செய்திருந்தாலும் இந்த அளவு செய்திருக்க முடியாது. ரொம்ப அற்புதமாக இருந்தது. உங்களுக்கு தான் இந்த கதை சரியாக இருந்தது என்ற என்று சொல்லி பாராட்டினார். எனக்கு அப்படியே சிலித்துரிச்சி. எவ்வளவு பெரிய நடிகர் என்னை இப்படியே பாராட்டுகிறாரே என்ற நினைத்தேன். 

அதன்பிறகு, ரஜினி, சத்யராஜ், விஜயகாந்த், சரத், முரளி, ராம்கி எல்லாரோடும் நடிச்சிருக்கேன். உங்களோடுதான் நடிக்கல. எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்க நல்லா இருக்கும் என்ற அவரிடம் கேட்டபோது பாப்போம் பாப்போம் என்று சொன்னார். 95–ல் நான் கேட்டேன் அவர் 3 வருடம் கழித்து 98–ல் என்னை அழைத்து, அப்போது எனக்கு ஒரு கதை சொன்னார். பிரமித்து போய்விட்டேன். ஆனால் அந்த கதையில் நான் வில்லன் என்பதால் வேண்டாம் என்று மறுத்துவி்ட்டேன்.

இந்த படத்தில் கொடூர வில்லனாக இருக்கிறது. அதிலும் உங்களை அடிப்பது போன்றும் இருக்கிறது. அதனால் இது வேண்டாம் சார் வேறு எதாவது என்று நான் சொன்னேன். அப்போது அவர் சரி பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார். அந்த படம் தான் மருதநாயகம். எலிசபெத் ராணியை அழைத்து வந்து பூஜை போட்டார். அதில் நாம் இல்லையே என்ற வருத்தம் எனக்கு இருந்தது.  அதன்பிறகு அவர் கூப்பிடவே இல்லை. அவசரப்பட்டு அவர் கொடுத்த வாய்ப்பை மறுத்துவிட்டோமோ என்று நினைத்தேன். 

திரும்பவும் 2004ல் திடீரென அழைத்து கதை பற்றி பேச வேண்டும் வாங்க, கண்டிப்பாக நெகடீவ் இல்லை என்று சொன்னார். அதில் பாசிட்டீவ் என்றவுன் உடனே ஒப்புக்கொண்டேன். அதுதான் விருமாண்டி. நல்லப்ப நாய்க்கர் என்ற ஒரு அற்புதமான கேரக்டரல் நடித்தேன். அந்த படத்தில் பெரிய அளவிலே என் பேருவந்துச்சு. அடுத்து தசாவதாரம். தசாவதாரத்திற்கு கூப்பிடுட்டார் என்று நெப்போலியன் மனம் திறந்து பேசியுள்ளார்.

Source link