தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? இந்த 12 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு: எப்போ வரை தெரியுமா?

பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும், அவர்களின் பயணத்தை மிகவும் வசதியாகவும் மாற்றும் வகையில், 12 சிறப்பு விரைவு ரயில்களின் சேவையை தெற்கு ரயில்வே நீட்டித்துள்ளது.

இந்த நீட்டிக்கப்பட்ட சேவைகளில், தாம்பரம் மற்றும் போடிநாயக்கனூர், திருநெல்வேலி, திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் அடங்கும்.

தாம்பரம் – போடிநாயக்கனூர் ரயில்கள்:

தாம்பரத்தில் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் போடிநாயக்கனூருக்கு இயங்கும் சிறப்பு ரயில் நவம்பர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக, போடிநாயக்கனூரில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தாம்பரத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவை நவம்பர் 15 வரை தொடரும்.

திருநெல்வேலி மற்றும் பிற வழித்தடங்கள்:

வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் திருநெல்வேலி – தாம்பரம் மற்றும் தாம்பரம் – திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவைகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன.

மேலும், எழும்பூர் – கன்னியாகுமரி, கன்னியாகுமரி – எழும்பூர், எழும்பூர் – கொல்லம், கொல்லம் – எழும்பூர் மற்றும் கொல்லம் – சென்னை சென்ட்ரல் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயல்களும் இந்த நீட்டிப்பில் அடங்கும்.

கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கும், இந்த வழித்தடங்களில் நிலவும் பயணிகள் நெரிசலைக் குறைப்பதற்கும் இந்த ரயில் சேவை நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.

Source link