ராகுல் மீது பிரியங்காவுக்கு நம்பிக்கையில்லை: பாஜ

புதுடில்லி: காங்கிரஸ் எம்பி பிரியங்கா – ராபர்ட் வாத்ரா மகன் ரெஹான். புகைப்படம் மீது ஆர்வம் காட்டும் அவர், ராஜஸ்தானில் பிகானேர் ஹவுஸ் கட்டடத்தில் கண்காட்சி நடத்தினார். நாளை மறுநாள் வரை நடக்கும் இக்கண்காட்சியில், எஸ்ஐஆர் குறித்த மாணவர் போராட்டம் மற்றும் சில ஆர்ப்பாட்டம் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்றன. இவற்றில் போராட்டக் காட்சியின் புகைப்படங்களை அகற்ற பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் அறிவுறுத்தியது. இல்லாவிட்டால் கண்காட்சி ரத்து செய்யப்படும் என எச்சரித்தது. இதனால் 74 புகைப்படங்களை அகற்றினார்.

இது தொடர்பாக பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்ட அறிக்கையில்,” சர்ச்சையை உருவாக்கி தனது மகனை அறிமுகம் செய்வதே பிரியங்காவின் திட்டம். அவர் ராகுல் மீது நம்பிக்கையை இழந்துவிட்டார்.

வியட்நாம் சென்றுள்ள ஒவ்வொரு விஷயம் குறித்தும் எக்ஸ் வலைதளத்தில் கருத்து பதிவிட்டு வரும் ராகுல், ரெஹானுக்கு ஆதரவாக ஒரு பதிவு கூட வெளியிடவில்லை. காங்கிரசில் ராகுல் – பிரியங்கா இடையே மோதல் நீடிக்கிறது,” எனக்கூறியுள்ளார்.

Source link