தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க, மின் வாரியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதற்காக, 127.56 கோடி ரூபாய் மானிய செலவை அரசு ஏற்க உள்ளது. மேலும், விவசாய மின் இணைப்புகளை வழங்க, கட்டமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கான, 750 கோடி ரூபாயை மின் வாரியம் ஏற்க உள்ளது.
மொத்தம், 50,000 இணைப்புகளில், சாதாரணப் பிரிவில், 20,000 இணைப்புகள், சுயநிதி பிரிவில், 3,372 இணைப்புகள், விரைவு திட்டத்தில், 25,282 இணைப்புகள், மீதி அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்பட உள்ளன.
