அரசுப் பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் வழக்கமான சைக்கிள்களுக்குப் பதிலாக மேம்படுத்தப்பட்ட, கூடுதல் சிறப்பம்சங்களைக் கொண்ட நவீன சைக்கிள்களை வழங்குவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம்.
பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, நவீன சைக்கிள் திட்டத்தின் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியுள்ளது.
ஒரு சைக்கிளின் விலை எவ்வளவு?
ஹீரோ நிறுவனம் அளித்த டெண்டரின் படி, மாணவர்களுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூபாய் ரூ.7,235-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது. மாணவிகளுக்கான ஒரு சைக்கிளின் விலை ரூபாய் ரூ.7,476-க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மொத்த செலவு:
அரசு பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கப்பட இருப்பதால், மொத்தம் 5,32,388 சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கு ரூ.392 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்ஜெட் தாக்கலின் போது 277 கோடி ரூபாயை நவீன சைக்கிள் திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் தற்போது கூடுதலாக ரூ.115 கோடி தேவைப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
