கனமழையால் நேர்ந்த பயங்கரம்; மண் சரிவில் பயணிகளோடு சிக்கிய அரசு பேருந்து

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, மேட்டுப்பாளையம் – ஊட்டி மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் மலைப்பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கஸ்டமைஸ் சோஃபாவில் நடந்த தவறு; கடைக்காரரை கதறவிட்ட நுகர்வோர் நீதிமன்றம்: வாடிக்கையாளருக்கு ரூ.88,000 இழப்பீடு

குறிப்பாக, இரவு 12 மணி முதல் தற்போது வரை வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நிற்கின்றன. சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும், அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் சரக்கு வாகனங்களும் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பர்லியார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் அரசுப் பேருந்து சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்தில் இருந்த 6 பேரும் பத்திரமாக வெளியே வந்துள்ளதாகவும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பாதையில் மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை அமைச்சர் சம்பத், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Source link