பெண்களே நோட் பண்ணிக்கோங்க; ரூ.2,500 பணம் எப்பொழுது வரும்; அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்

விருதுநகர்: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 பணம் எப்பொழுது வழங்கப்படும் என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது: ரூ.2,500 பணத்தை கண்டிப்பாக, உறுதியாக முதல்வர் விஜய் மக்களுக்கு கொடுப்பார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. நமது ஆட்சி 150 நாட்கள் கடந்து வந்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் விஜய் வெகு சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறார். மக்கள் அதை பார்த்து கொண்டு, சந்தோஷமாக வரவேற்று கொண்டு இருக்கிறார்கள். ரூ.2500 பணமும், வெகு வேகமாக, வெகு விரைவில் மக்கள் பயன் அடைவதற்கு கொண்டு வருவோம்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட்டு, அவர்களின் பெயர்களை நீக்கம் செய்வது, தகுதியான நபர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. எங்களுடைய எங்களுக்கு வராமல் வேறு ஒருவருடைய அக்கவுண்ட்டுக்கு பணம் சென்றுவிடுகிறது என நிறைய புகார்கள் வந்து இருக்கிறது. அதனை சரி செய்யும் பணி நடக்கிறது.

கடந்த ஆட்சியில் சரியான வழிமுறைகளை பின்பற்றாமல் கொடுத்ததின் அடிப்படையில், மக்களுக்கு முழுமையாக பயன் அடையவில்லை. தவெக ஆட்சியில் முழுமையாக மக்கள் பயன் அடையும் வேலைகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய் ஒரே நல்ல எண்ணத்தில் பணிகள் நடக்கிறது. அதனால் தாமதம் ஆகுகிறது, முதல்வர் விஜய் சொன்ன மாதிரி சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றுவார். வேலைகள் முடிந்த பிறகு தான் நாம் உறுதியாக சொல்ல முடியும்.

இவ்வாறு அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறினார்.

Source link