தவெக நிர்வாகிகள் மீது திமுக ஐடி விங் பாலியல் குற்றச்சாட்டு பட்டியல் வெளியீடு; தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியலில் விவாதம் எழுந்துள்ளது.
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆளும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எதிராக திமுக விமர்சனங்களை முன்வைத்துள்ளது. தவெக நிர்வாகிகள் தொடர்பான 15 பேர் கொண்ட பட்டியலை திமுக ஐடிவிங் வெளியிட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள பெயர்கள் மற்றும் அவர்கள் மீது குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் விவாதத்தில் கவனம் பெற்றுள்ளன.
15 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
சமூக வலைதளப் பகிர்வின்படி, தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் தவெக அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் மீது சுமத்தப்பட்ட 15 குறிப்பிட்ட பாலியல் வழக்குகளின் விவரங்கள் மற்றும் புகார்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
திமுக குற்றச்சாட்டு
மணிகண்டன் (சேலம் மாவட்ட பிரமுகர்) – 50 க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசப் படம் எடுத்து மிரட்டியது. பாலமுருகன் (தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) ஜெயபால் (ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகி) – வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணிற்கு கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல். தவெக MLA விஜி சரவணன் – பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு கொலை மிரட்டல். வேம்புலி (ஆலந்தூர் வடக்குப் பகுதி செயலாளர்) – மகளிர் உடற்பயிற்சி மையப் பொறுப்பாளருக்கு பாலியல் தொல்லை. விஜய் மோகன் (ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கழக செயலாளர்) – கட்சியில் இணைத்துக் கொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தது
தவெக நிர்வாகிகள் மீது பாலியல் புகார்
6. பாம்பு தினேஷ் (ஆர்.கே. நகர் 43-ஆவது வார்டு பகுதி பொறுப்பாளர்) – 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
7. பிரைடர், ருஸ்வெல்ட் (தூத்துக்குடி திருச்செந்தூர் செயற்குழு உறுப்பினர்கள்) – பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல்
8. பிரகாஷ் (எ) குட்டி (திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் / பூந்தமல்லி வேட்பாளர்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
9. மகாராஜா, ராபின், ஹரிஸ் (சிவகங்கை மாவட்ட பிரமுகர்கள்) – பெண் நிர்வாகிக்கு பாலியல் தொல்லை
10. தவெக குளித்தலை ஒன்றிய செயலாளர் ரமேஷ் – மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை
தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள்
11. கண்ணன் (மதுரை கீழ்மாத்தூர் நிர்வாகி) – 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை
12. மதன் ராஜ் (வில்லிவாக்கம் பகுதி துணை செயலாளர்) – பெண் காவலரிடம் அத்துமீறி பாலியல் தொல்லை
13. ஆனந்த் (சென்னை அசோக் நகர் நிர்வாகி) – சாலையில் உறங்கிய 65 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
14. சசிகுமார் (அரக்கோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர்) – கட்சியில் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறி திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை
15. கிரிஸ்டோபர் (கன்னியாகுமரி மத்திய மாவட்ட செயற்குழு உறுப்பினர்) – கல்லூரி மாணவிக்கு காரில் பாலியல் தொல்லை
கன்னியாகுமரி சம்பவத்தால் அதிகரித்த அரசியல் விமர்சனம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகத் தவெக நிர்வாகி கிறிஸ்டோபர் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் அக்டோபர் 23, 2026 அன்று அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. மழையின்போது வீட்டிற்குச் செல்ல உதவுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்றபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டதாகச் தகவல்கள் கூறுகின்றன. இதையடுத்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
பெண்களின் பாதுகாப்பு குறித்து அரசியல் விவாதம்
கன்னியாகுமரி சம்பவத்தைத் தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பியுள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், புகார்களுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது எக்ஸ் பக்கங்களில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஐடிவிங் பதிவு
