ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு, பிரம்மாண்ட பட்ஜெட்டோ, பெரிய முன்னணி நட்சத்திரங்களோ தேவையில்லை. சரியான கதையும் அதற்கான திரைக்கதையும் இருந்தால் எந்த படமும் வெற்றி பெறும் என்பதற்கு பல உதாரணங்களை சொல்லலாம். சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல படங்கள் வசூலில் சாதனை படைத்ததும், பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்ததையும் பார்த்திருக்கிறோம்.
இந்த வரிசையில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வசூல் வேட்டை நடத்திய சில படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஹனுமான் அன்ஷ் (Hanuman Ansh)
ஆன்மீகத் துறவியான நீம் கரோலி பாபாவின் (Neem Karoli Baba) வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஹனுமான் அம்ஷ்’, சுமார் ரூ2 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தற்போதுவரை இந்தியாவில் மட்டும் சுமார் ரூ193 கோடி வசூல் செய்துள்ளது. ரிலீஸ் ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கிய இத்திரைப்படத்தின் பயணம், மக்களின் பாசிட்டீவான விமர்சனங்கள் மூலம் வசூலை அதிகரிக்க தொடங்கியது. முன்னணி நட்சத்திரங்கள் எவரும் நாயகனாக இல்லாதபோதிலும் ஒரு மாபெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது.
ஹனு-மன் (Hanu-Man)
தேஜா சஜ்ஜா நடித்த ‘ஹனு-மேன்’ திரைப்படம் சுமார் ரூ40 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் தோராயமாக ரூ300-350 கோடி வரை வசூலித்தது. 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான இந்த தெலுங்கு சூப்பர் ஹீரோ திரைப்படம் இந்தியா முழுவதுமான பெரிய வெற்றியைப் பெற்றது. பல பிரம்மாண்ட சூப்பர் ஹீரோ படங்களின் பட்ஜெட் இல்லாத நிலையிலும் இந்த படம் வசூலில் பெரிய சாதனையை படைத்திருந்தது.
லாலோ – கிருஷ்ணா சதா சகாயதே (Laalo – Krishna Sada Sahaayate)
மிகச்சிறிய பட்ஜெட்டில் ஒருவாக மாபெரும் வசூல் வெற்றியை பெற்ற திரைப்படம் தான் ‘லாலோ – கிருஷ்ணா சதா சகாயதே’. குஜராத்தி மொழியில் வெளியான இந்த திரைப்படம், ரூ50 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் ரூ120 கோடிக்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது. மக்களின் பாசிட்டீவான விமர்சனங்களாலும், இதன் பக்திசார்ந்த கதைக்கருவும் இத்திரைப்படம் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தது. இந்த படத்தின் வெற்றி, குஜராத்தி சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாற்றியது.
காந்தாரா (Kantara)
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ திரைப்படம் சுமார் ரூ15-16 கோடி பட்ஜெட்டில் உருவாகி உலகம் முழுவதும் சுமார் ரூ400-450 கோடி வசூலித்தது. ஆழமான கதைக்களம், கிராமத்து தெய்வ நம்பிக்கை மற்றும் கர்நாடகக் கடலோரப் பகுதியின் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம், இதன் சொந்த மாநிலமான கர்நாடகத்தை கடந்து இந்திய அளவில் பெரிய வெற்றிப்படமாக மாறியது. இந்த படத்தின் வெற்றி, இறுதியில் ஒரு மிகப்பெரிய திரைப்படத் தொடருக்கு (franchise) வழிவகுத்தது.
மகாராஜா (Maharaja)
விஜய் சேதுபதி நடிப்பில் அவரது 50-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான படம் ‘மகாராஜா’. சுமார் ரூ20-30 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலகளவில் ரூ199 கோடியை நெருங்கி வசூலித்தது. த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், மக்களின் பலத்த ஆதரவையும் நேர்மறை விமர்சனங்களையும் பெற்றது; பின்னர் டிஜிட்டல் தளங்களில் (OTT) வெளியானபோதும் ரசிகர்கள் மத்தியில்ி பெரிய வரவேற்பை பெற்றிருந்துத.
மஞ்ஞம்மல் பாய்ஸ் (Manjummel Boys)
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மலையாளத் திரைப்படம் தான் ‘மஞ்ஞம்மல் பாய்ஸ்’, சுமார் ரூ20 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், உலகம் முழுவதும் சுமார் ரூ240-242 கோடி வசூலித்தது. வழக்கமான நட்சத்திர நடிகர்கள் இல்லாத நிலையிலும், இத்திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இதன் உணர்ச்சிப்பூர்வமான கதை, பாசிட்டீவான விமர்சனங்களும் கேரளாவை கடந்து உலகம் முழுவதும் இந்த படத்தை கொண்டு சென்றது.
மகாவதார் நரசிம்ஹா (Mahavatar Narsimha)
அனிமேஷன் புராணத் திரைப்படமான ‘மகாவதார் நரசிம்ஹா’வும் சுமார் ரூ20-40 கோடியில் தயாராகி,உலகளவில் சுமார் ரூ326 கோடியை வசூலித்துள்ளது. சினிதா நட்சத்திரங்கள் யாரும் நேரடியாக இந்த நடத்தில் நடிக்கவில்லை என்றாலும், உண்மையான நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களின் வசூலுக்கு இணையான வசூலை இந்த படம் பெற்றதுரு. இந்திய அனிமேஷன் துறைக்கு, இத்திரைப்படத்தின் சாதனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
