டெல்டாவை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும்- திருமாவளவன்

Summary

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர்களாக இருந்தாலும் த.வெ.க அரசு தனது சக்திக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது.

தஞ்சையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டாவை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வண்டும்.

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசியலிலும் ஆட்சியிலும் புதியவர்களாக இருந்தாலும் த.வெ.க அரசு தனது சக்திக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறது. மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டி வருகின்றனர். அரசின் நடவடிக்கைகளை பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டுகின்றனர்.

நடிகர் தனுஷ் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவதாக அறிவிக்கவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் தகவலுக்கு பதில் கூற தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link