பாரா ஆசிய விளையாட்டில் 114 பதக்கங்களுடன் 4ம் இடம்; சாதித்தது இந்தியா

2026ம் ஆண்டு பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றன. ஒட்டு மொத்தமாக 114 பதக்கங்களுடன் இந்தியா பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டு, ஜப்பானின் நாகாயோவில் அக்டோபர் 18ம் தேதி தொடங்கியது. இன்றுடன் போட்டிகள் நிறைவு பெற்றன.

பதக்க பட்டியலில் இந்தியா 4ம் இடத்தை பிடித்துள்ளது. 114 பதக்கங்களில் தங்கம் 30, வெள்ளி 35, வெண்கலம் 49 பதக்கங்களை வென்றுள்ளது.

கடந்த காலங்களில் ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளை விட இம்முறை இந்திய அணி சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இந்தியாவின் நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி இருக்கின்றனர்.

சிறந்த தடகள வீராங்கனை என்று பெயர் பெற்ற ஷீத்தல் தேவி, இம்முறை 3 பதக்கங்களை அள்ளி இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறார். அவற்றில் 2 தங்கம், ஒரு வெள்ளி ஆகும். துளசிமதி முருகேசன், ரவி புடிகினா, ஹிமான்சு நந்தால் ஆகியோர் தலா 3 பதக்கங்களை வென்றனர்.

துளசிமதி ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். ரவி கார்த்திக் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார். ஹிமான்சு நந்தால் 2 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார்.

துப்பாக்கிச்சுடுதல், தடகளம் பிரிவுகளில், இந்தியாவின் மோனா அகர்வால், நிஷாத் குமார், பிரணவ் சூர்யா, சிம்ரன் மற்றும் திலிப் காவித் ஆகியோர் தலா 2 தங்கம் வென்றுள்ளனர். ஈட்டி ஏறிதலில் இருமுறை சாம்பியனான சுமித் அன்டில், இம்முறையும் பதக்கத்தை அறுவடை செய்து பாராட்டுகளை அள்ளி இருக்கிறார்.

கடந்த காலங்களை விட அதிக பதக்கங்களை வென்று இம்முறை இந்திய அணி வீரர்கள் சாதித்துள்ளனர். 2025ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா ஒட்டு மொத்தமாக 108 பதக்கங்களை வென்றது. இம்முறை கூடுதலாக 6 பதக்கங்களை பெற்று 4ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

Source link