திருவனந்தபுரம்: கேரளாவில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.,) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாளை (அக்., 25) மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (அக்., 26) இடுக்கி, பாலக்காடு ஆகிய 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படவும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.அபாயகரமான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், அறிவுறுத்தல்களை பின்பற்றவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
