தவெக ஆட்சி அருமை… நன்றாக செயல்படுகின்றனர்; மதுரை ஆதீனம் நெகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூடியிருந்த நிருபர்கள், தமிழகத்தில் தற்போதைய தவெக ஆட்சி எவ்வாறு செயல்படுகிறது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு மதுரை ஆதீனம் அளித்த பதில் வருமாறு;

அருமையாக செய்கின்றனர். லஞ்சம் வாங்கக்கூடாது என்கின்றனர். லஞ்சம் வாங்குகின்றனர் என்றால் என்னிடம் வந்து சொல்லுங்கள் என்கின்றனர். நல்லா செய்கின்றனர். மக்களுடன் எளிமையாக பழகுகின்றனர்.

எல்லா மதத்தையும் மதிக்கின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அவர் (முதல்வர் விஜயை குறிப்பிடுகிறார்) சாமி கும்பிட்டுவிட்டு போனார். எல்லா கோவில்களுக்கும் செல்கிறார், நான் பாராட்டுகிறேன்.

சட்டம் ஒழுங்கிற்கு மக்களும் ஒத்துழைக்க வேண்டும். அரசாங்கத்தால் எவ்வளவு தான் செய்வார்கள்? நிறைய செய்கின்றனர். நன்றாக தான் உள்ளது, நன்றாகவே செயல்படுகின்றனர்.

இவ்வாறு மதுரை ஆதீனம் பேட்டி அளித்தார்.

Source link