பாட்னா; பீஹாரில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எம்எல்ஏ அனந்த் சிங் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டு உள்ளார்.
பீஹாரின் மோகாமா தொகுதியின் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ அனந்த் சிங். பிரபல தாதாவாக அறியப்படுபவர். தொடக்கத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தில் இருந்து, பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து எம்எல்ஏவானார். இவரின் மனைவி முன்னாள் எம்எல்ஏ நீலம் தேவி. அண்மையில், நிதிஷ்குமாருக்காக 9 பேரை கொலை செய்தேன் என்று பேசி சர்ச்சையில் சிக்கியவர்.
தற்போது, ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்பட்டு உள்ளார். அவரின் மனைவியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கட்சி தலைமையின் முடிவுக்கு எதிராக, ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளர் அனுஜ் சிங்கை ஆதரித்தார். அவரின் செயல்பாடு கட்சிக்குள் விமர்சனமாக எழுந்தது.
இதையடுத்து, கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அனந்த் சிங் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் பீஹார் தலைவர் உமேஷ் சிங் குஷ்வாஹா அறிவித்துள்ளார். அவரின் அறிவிப்பு;
கட்சியின் உத்தரவுகளை, அறிவுறுத்தல்களை அவர் (அனந்த் சிங்) மீண்டும் மீண்டும் புறக்கணித்தார். கட்சியின் தலைமைக்கு எதிராகவும், கட்சியை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார். எனவே 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவரின் நீக்கம் குறித்து சபாநாயகர் பிரேம்குமாருக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.
இவ்வாறு உமேஷ் சிங் குஷ்வாவா கூறி உள்ளார்.
அனந்த் சிங் மனைவி நீலம் தேவியும் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார்.
