புயல் எச்சரிக்கை எதிரொலி; ஜனாதிபதி முர்முவின் ஒடிசா பயணம் ஒத்தி வைப்பு

ஜனாதிபதி முர்மு, அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 29 தேதிகளில் ஒடிசாவின் ராய்ரங்பூர், சொந்த மாவட்டமான மயூர்பஞ்சிற்கு செல்ல இருந்தார். அதற்கேற்ப அவரின் பயணத்திட்டம் அமைக்கப்பட்டு இருந்தது.

தற்போது ஒடிசாவில் புயல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கிறது. எனவே அவரின் ஒடிசா பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அதிகாரிகள், வானிலை சாதகமாக இல்லாததாலும், பாதுகாப்பு காரணங்களினாலும் பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரத்து செய்யப்படவில்லை என்று கூறினர்.

Source link