பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனதைபேயின் பின்-சியான் சியு மோதினர். முதல் செட்டை 21-13 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-14 என வென்றார். மொத்தம் 39 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் சிந்து 21-13, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ஜப்பானின் ஹினா அகேச்சியை எதிர்கொள்கிறார் சிந்து.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ஜப்பானின் நோஜோமி ஒகுஹரா மோதினர். இதில் அஷ்மிதா 10-12, 21-17, 16-21 என போராடி தோல்வியடைந்தார்.
