நடிகர் தனுஷ் குறித்த கேள்வி – தொல். திருமாவளவன் எம்.பி. நச் பதில்!

நடிகர் தனுஷின் அரசியல் வருகை தொடர்பான கேள்விக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்துள்ளார். தஞ்சையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், இன்று (24.10.2026) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது, நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், “தனுஷுடைய வருகை என்பது மிகவும் பிரீமெச்சூர் கேள்வி. அதாவது, அவர் அப்படி எதுவும் அறிவிக்கவே இல்லை. சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அரசியலுக்கும் ஆட்சிக்கும் அவர்கள் (த.வெ.க.) புதியவர்கள் என்றாலும், சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் தங்களது சக்திக்கேற்ப போராடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குரிய நலன்களைப் பாதுகாப்பதில் தீவிரமான அக்கறை செலுத்தி வருகிறார்கள். ஆகவே, அவர்களுடைய நடவடிக்கைகளைப் பொதுமக்கள் வரவேற்றுப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.