திருப்பூர்: சர்வதேச சந்தையில் சாதகமான சூழலால் பருத்தி நுால், துணி மற்றும் ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி கடந்த 6 மாதத்தில் 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால், இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய வெளிநாட்டு வணிகர்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, உலகம் முழுவதும் வரவேற்பு பெற்றுள்ள பருத்தி நுால், துணி, ஆடை மற்றும் ஜவுளி பொருட்களை இறக்குமதி செய்ய அதிக ஈடுபாடு காட்டுகின்றனர்.
கடந்த செப். மாதம் மட்டும் 10,728 கோடி ரூபாய்க்கு பருத்தி சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியாகியுள்ளன.
கடந்த 2025 செப்டம்பரில் 8,219 கோடி ரூபாயாக இருந்தது. இந்தாண்டு 30 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த நிதியாண்டின் ஏப். முதல் செப். வரையிலான 6 மாதங்களில் 50,097 கோடி ரூபாய்க்கு பருத்தி நுால், துணி, ஆடை, ஜவுளி பொருட்கள் மற்றும் கைத்தறி ஜவுளிகள் ஏற்றுமதியாகி இருந்தன.
நடப்பு நிதியாண்டில் அதே காலகட்டத்தில் இது 60,123 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 20 சதவீதம் அதிகம்.
