ஜப்பான் – நாகோயாவில் நடைபெற்று வந்த ஆசியன் பாரா 2026 விளையாட்டு போட்டிகள் , கண் கவர் நிகழ்ச்சிகளுடன் , இனிதே நிறைவு பெற்றது. கடந்த பாரா ஆசியன் விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களுடன் நான்காம் இடம் பெற்றிருந்த இந்தியா, இம்முறை கூடுதலாக 3 பதக்கங்களை பெற்று 4 வது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. ஆசிய பாராலிம்பிக் குழுவின் தலைவர் மஜித் ரஷீத், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களை பாராட்டியும் , அவர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பேசி நிகழ்ச்சி நிறைவடைந்ததாக அறிவித்தார்.
நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜப்பானின் பிரதமர் சானே டகாயிச்சியும், விளையாட்டு வீரர்களின் உறுதி , குழுப்பணி மற்றும் விளையாட்டு மனப்பான்மையைப் பாராட்டி பேசினார்.மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு மனப்பான்மையை ஊக்குவிக்கவும் , அவர்களின் திறமைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையிலும் தூர கிழக்கு மற்றும் தென் பசிபிக் விளையாட்டு கூட்டமைப்பிலிருந்து, ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் உருவாகியது.
