உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல சமையல் கலைஞர் செப் தாமு , சிகிச்சை பலனின்றி மரணமடைந்த நிலையில், அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், மற்றும் சக சமையல் கலைஞர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள என் பதிவில், பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும்.
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு என்று அழைக்கப்படும் திரு.கே.தாமோதரன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. தனது சமையல் திறமையாலும், தனித்துவமான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகச் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர். 2010 ஆம் ஆண்டில் தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தான் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்ததோடு, பத்மஸ்ரீ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். அவரது மறைவு சமையல் கலைத் துறைக்குப் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) October 25, 2026
அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சமையல் கலையை நேசிக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
செப் தாமுவுடன் பணியாற்றிய செப் வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், சமையல் கலைஞர் டாக்டர் தாமு, பத்மஸ்ரீ டாக்டர் தாமு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி ஆழமான மனவேதனையை அளிக்கிறது. கேட்ரிங் துறையிலும் (catering industry) இவ்வளவு பெரிய புகழைப் பெற முடியும், பத்மஸ்ரீ விருதைப் பெறும் உயரத்தைக்கூட எட்ட முடியும் என்று பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டும் முன்னுதாரணமாக அவர் திகழ்ந்தார்.
26 முதல் 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி, தமிழ்நாட்டின் பாரம்பரிய சமையல் கலையை உலகெங்கிலும் அவர் பிரபலப்படுத்தினார். அவர் எனக்கு 15 ஆண்டுகளாக ஒரு நல்ல நண்பராக இருந்தார்; நாங்கள் 15 ஆண்டுகள் இணைந்து பணியாற்றினோம். அந்த நினைவுகள் எப்போதும் என் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கும். அவரைப் பிரிந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மிகவும் அதிர்ச்சியளிக்கும் செய்தி. அவர் சாத்தியமான அனைத்து வழிகளிலும் கௌரவிக்கப்பட வேண்டும். அவரது நினைவுகள் எப்போதும் நம்முடன் இருக்கும், அவருடன் செலவழித்த காலம் என்றென்றும் மறக்க முடியாத நினைவுகளாக நிலைத்து நிற்கும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என செப் வெங்கடேஷ் பட் இன்ஸ்டா வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்ஷன், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, அவர் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமாக உள்ளது என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கும். ஒருமுறை ஷூட்டிங்கில் விழுந்து காலில் அடிபட்டுவிட்டது. அதனால் அவரை எப்போதும் நாங்கள் தனியாக கேர் எடுத்து பார்த்துக்கொள்வோம். இவர் இல்லாதது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.
வடிவேல் பாலாஜி அண்ணன் இறக்கும்போது இப்படித்தான் இருந்தது. தாமு அப்பா அவருடன் பல இடங்களுக்கு போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் முடியவில்லை. அவர் ஒரு குழந்தை மாதிரி, எல்லோரிடமும் அன்பாக பழகுவார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு சாப்பாடு நன்றாக இருந்தால் இதை டேஸ்ட் பண்ணு என்று கூப்பிட்டு கொடுப்பார். அவர் எவ்வளவு கவலையாக இருந்தாலும், ஒரு ஜோக் சொன்னால் உடனடியாக ஜாலியாகிவிடுவார்.
கடின உழைப்பாளி, அனைத்து ஷோக்களை விடவும் இந்த ஷோ ரொம்ப கஷ்டமானது. முழு நாளும் நிற்கவேண்டி இருக்கும். குக்கிங்கில் அவர் ஒரு லெஜண்ட். ஆனால் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்களை பாராட்டுவார். நிகழ்ச்சியில் அவ்வப்போது நான் அவருக்கு கால் அமுக்கிவிடுவேன். ஆனால் இப்போது அவரே இல்லை என்று ரக்ஷன் கூறியுள்ளார்.
அதேபோல் தனியார் தொலைக்காட்சிக்கு நடிகை தீபா சங்கர் அளித்த பேட்டியில், தாமு அப்பாவுடன் வேலை செய்தது ஒரு மறக்க முடியாத அனுபவம். நாங்கள் கடைசியாக ஷூட்டிங் பண்ணும்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் தான் இருந்தார். எல்லோரையும் பிடிக்க வைக்குமு் குணம் கொண்டவர். ஆனால் இப்போது அவர் இல்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. ரொம்ப எளிமையான மனிதன். அவர் வாழ்க்கையில் கண்ட அனுபவங்களை பலமுறை எங்களிடம் கூறி இருக்கிறார்.
கடைசியாக நான் அவரை ஷூட்டிங்கில் பார்க்கும்போது ஒரு ஸ்டிக் வைத்து தான் நடந்தார். ஆனால் அவரிடம் எப்படி கேட்பது என்று தெரியாமல் நான் அவரிடம் கேட்கவில்லை. சயைமல் கலையை தாண்டி ஒரு நல்ல நகைச்சுவை கலைஞர் அவர். எல்லோரிடமும் உரிமையாக பேசக்கூடிய ஒரு நபர். தவறுகள் இருந்தாலும் அதை சிரித்துக்கொண்டே சொல்லுவார் என்று தீபா கூறியுள்ளார்.
