பிரபல இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் வரும் நவம்பரில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ள நிலையில், நவம்பர் 21-ல் சென்னையில் நடக்கும் பிரம்மாண்ட வரவேற்பு விழாவிற்காக பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் விஜய் வரை இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளரும், சன் டிவி குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
கிரீஸில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம்இவர்களின் திருமண கொண்டாட்டங்கள் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் மிகவும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளது. இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களும், சில முக்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர். விருந்தினர்களுக்கான விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை மாறன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி
திருமணத்தைத் தொடர்ந்து, நவம்பர் 21-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த விழாவில் அரசியல், திரையுலகம், தொழில் துறை மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
அரசியல் பிரமுகர்களுக்கு நேரில் அழைப்பு
வரவேற்பு நிகழ்ச்சிக்காக மாறன் குடும்பத்தினரும் அனிருத்தின் பெற்றோர் ரவி ராகவேந்திரா – லட்சுமி தம்பதியினரும் முக்கிய அரசியல் தலைவர்களை நேரில் சந்தித்து பத்திரிகை வழங்கி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி: கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் மற்றும் அனிருத்தின் பெற்றோர் இணைந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அழைப்பு புதுடெல்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, காவியா கலாநிதி மாறன் – அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழா அழைப்பிதழை வழங்கினார் சன் டிவி குழுமத் தலைவர் கலாநிதி மாறன். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காவேரி கலாநிதி உடன் இருந்தார். #SunNews | #KaviyaMaran | #Anirudh | @INCIndia
— Sun News (@sunnewstamil) October 23, 2026
டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த கலாநிதி மாறன், வரவேற்பு பத்திரிகையை வழங்கினார். அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார் இதையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மாறன் தம்பதியினர் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளனர். அதே போல, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை, கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் மற்றும் அனிருத் ஆகியோர் கடந்த சனிக்கிழமை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர். அதே போல, தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இல்லத்தில் அவரைச் சந்தித்த கலாநிதி மாறன் குடும்பத்தினர், சென்னை வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனால், பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, நிர்மலா சீதாராமன், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அனிருத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் ரஜினிகாந்த் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நவராத்திரி பூஜையில் திரண்ட திரை பிரபலங்கள்
திருமண முன்னேற்பாடுகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வர, அனிருத்தின் இல்லத்தில் சமீபத்தில் நடைபெற்ற நவராத்திரி பூஜையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி, ஷாலினி அஜித் குமார், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், நடிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் பங்கேற்று சிறப்பித்தனர். அனிருத்துடன் நீண்டகால நட்பும் தொடர் வெற்றிகளும் கொண்ட ரஜினிகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனின் வருகை இந்த நிகழ்வில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்திய அரசியலின் முன்னணித் தலைவர்கள், திரையுலகின் மாபெரும் நட்சத்திரங்கள், மற்றும் தொழில் துறை பிரபலங்கள் அனைவரும் ஒரே மேடையில் இணையவுள்ளதால், அனிருத் – காவ்யா மாறன் தம்பதியினரின் சென்னை திருமண வரவேற்பு நிகழ்ச்சி, 2026-ஆம் ஆண்டின் மிகவும் பிரம்மாண்டமான மற்றும் மறக்க முடியாத வி.ஐ.பி திருவிழாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
