-நமது சிறப்பு நிருபர்-
மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு துறை ஆணையராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே துக்காராம் முண்டே பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். செய்திகளில் பரவலாக பேசப்படுகிறார். நேர்மையை பாராட்டி மக்கள் இவரை ‘ஐஏஎஸ் சிங்கம்’ என்று அழைக்கின்றனர்.
தீபாவளியை பண்டிகையை முன்னிட்டு, மஹாராஷ்டிராவில் உணடு பொருட்களில் கலப்படம், பாதுகாப்பு விதிமீறல்களை தடுப்பதற்காக, உணவு பாதுகாப்பு துறை ஆணையர் துக்காராம் முண்டே தலைமையில் அதிகாரிகள் குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். தரம் குறைந்த உணவுப் பொருட்கள், குட்கா, காலாவதியானபொருட்களின் கையிருப்புகள் என மொத்தம் ரூ.16.92 கோடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காலாவதியான 8,392 கிலோ உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 68 நிறுவனங்களின் உரிமங்கள் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன. 22 வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 20 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து உணவு கலப்படத்தை தடுக்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
