சிறுமிகள் பாலியல் வழக்கு; வீரமணி மீது 8வது வழக்குப்பதிவு

சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை 12 சிறுமிகள் அளித்த புகாரின் பேரில், வீரமணிக்கு உடந்தையாக இருந்த தோழி சாந்தி உள்பட 8 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டநடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க செய்த பணப்பரிவர்த்தனை குறித்து வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வீரமணி மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, 8வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Source link