கன்னடர்களுக்கு வேலை தராவிட்டால் நடவடிக்கை; ஐடி நிறுவனங்களுக்கு டிகே சிவகுமார் எச்சரிக்கை

கர்நாடகாவில் ஐடி நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் கன்னடர்கள் வேண்டும் என்றே புறக்கணிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை பாயும் என்று முதல்வர் டிகே சிவகுமார் எச்சரித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு;

பெங்களூருவில் ஐடி நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக தொடர்ந்து வரும் புகார்கள் வருத்தம் அளிக்கின்றன. கன்னடம் பேசுபவர்கள் ஒரங்கட்டப்படுவது விவகாரத்தை அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு வருகிறது.

இங்கு கன்னடர்களே முதன்மையானவர்கள். அவர்களின் உரிமைகள், கண்ணியம், வாய்ப்புகள் உள்ளிட்டவை எந்த காரணத்திற்காகவும் புறக்கணிக்கப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

நாட்டின் ஐடி தலைநகராக பெங்களுருவை இந்த உலகம் பார்க்கிறது. கன்னடர்களின் திறமை, ஆற்றல் மற்றும் செயல்திறனை கண்டு நாங்கள் பெருமை கொள்கிறோம்.

ஏதாவது ஒரு நிறுவனம், கன்னடர்களை வேண்டும் என்றே ஓரங்கட்டியது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். கன்னடர்களின் குரலாக ஒலிக்கும் இந்த அரசு அவர்களின் கவலைகளை போக்கும் உறுதியுடன் எப்போதும் உள்ளது.

இவ்வாறு முதல்வர் டிகே சிவகுமார் பதிவில் கூறி உள்ளார்.

Source link