ரியாத்: ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ரியாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரையில் 14 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம்களின் புனித தலமான மெக்காவை குறிவைத்து வீசப்பட்ட ஏவுகணைகளை சவுதி அரேபியா வெற்றிகரமாக முறியடித்தது.
பதற்றமான நிலவி வரும் சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர கால தேவைக்கு உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
தற்போது, இந்தியர்களுக்கு புதிய எச்சரிக்கையை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. ஏவுகணை, ட்ரோன்களை இடைமறித்து தாக்குவதையோ, அவை விழுந்து சேதமடைந்த பகுதிகளையோ வீடியோ, போட்டோ எடுப்பதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தால், சட்டப்படி குற்றம் என்று சவுதி பாதுகாப்புத்துறை விடுத்த எச்சரிக்கையை சுட்டிக்காட்டியுள்ளது. சவுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட தவறினால், சிறை போன்ற தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
