அல்மாட்டி: அல்மாட்டி ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
கஜகஸ்தானில், ஏ.டி.பி., அல்மாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ரியான் செக்கர்மேன் ஜோடி, ஆஸ்திரியாவின் லுாகாஸ் மிட்லர், நீல் ஓபர்லைட்னர் ஜோடியை சந்தித்தது. ‘டை பிரேக்கர்’ வரை நீடித்த முதல் செட்டை 7–6 எனக் கைப்பற்றிய பாம்ப்ரி–ரியான் ஜோடி, ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 2வது செட்டை 6–7 என இழந்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் ‘சூப்பர் டை பிரேக்கரில்’ எழுச்சி கண்ட இந்தியா–அமெரிக்க ஜோடி 10–2 என வென்றது.
ஒரு மணி நேரம், 22 நிமிடம் நீடித்த போட்டியில் யூகி பாம்ப்ரி, ரியான் செக்கர்மேன் ஜோடி 7–6, 6–7, 10–2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
