போர்கள், இயற்கை பேரிடர்கள், அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் என உலக நாடுகள் பரபரப்பாக இயங்கி கொண்டிக்கும் வேளையில், சில நாடுகளில் தற்போது தேர்தல் சீசன் நடந்து வருகிறது. அமெரிக்க பார்லிமென்டுக்கு வரும், நவ., 3ல் இடைக்கால தேர்தல் நடக்க உள்ளது. இதைத் தவிர பல நாடுகளில் பார்லிமென்டுக்கும், பிரதமர், அதிபரை தேர்வு செய்வதற்கும் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்கும் நாடுகளில் தற்போதைய ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை மக்களிடையே வலுவடைந்துள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை:
ஸ்லோவாக்கியாவில் 8 கவர்னர்கள் மீண்டும் வெற்றி
பிராட்டிஸ்வாலா :
ஸ்லோவாக்கியாவில் உள்ள எட்டு பிராந்தியங்களுக்கு கவர்னர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடந்த தேர்தலில், தற்போதைய கவர்னர்களே மீண்டும் வெற்றி பெற்று பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் மொத்தம் எட்டு பிராந்தியங்கள் உள்ளன. இப்பிராந்தியங்களை நிர்வகிப்பதற்காக கவர்னர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இத்தேர்தலில் தற்போதைய கவர்னர்கள் உட்பட பல கட்சிகளை சேர்ந்த மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் போட்டியிட்டனர்.
இந்தத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின. இதில், தற்போது கவர்னர்களாக உள்ளவர்களே மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவிகளை தக்க வைத்துள்ளனர். தற்போதைய ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையால், புதிதாக யாரையும் தேர்ந்தெடுக்காமல், அந்த பதவியில் இருந்தவர்களுக்கே ஓட்டளித்து மீண்டும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
