இந்த வார ராசிபலன் அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடஸ்ரீ முருகப்ரியன்.
மேஷம்:
மேஷராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான வாரம். வாரத் தொடக்கத்தில் மட்டும் புதிய முயற்சியை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் தொடர்பான முக்கிய விஷயத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறு வதற்கு வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேறு வேலைக்கு முயற்சி செய்வதைத் தவிர்க்கவும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள்.
வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்படக்கூடும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட நாள்கள்: 26,31
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பாள்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.
ரிஷபம்:
ரிஷபராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். திருமண வயதில் உள்ள பெண் அல்லது பிள்ளைக்கு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருந்தாலும் கூடுமானவரை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகளும் ஏற்படக்கூடும்.
வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு பதவிஉயர்வு அல்லது ஊதியஉயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. சிலருக்கு அவர்கள் விரும்பிய இடத்துக்கு மாற்றல் கிடைக்கும்.
வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். அவசியம் முடிவு எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டால், அனுபவமுள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 26,30
அதிர்ஷ்ட எண்கள்:2, 6
வழிபடவேண்டிய தெய்வம்: மகாலட்சுமி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபமேற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ பீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ
ஸர்வ து:க்க ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
மிதுனம்:
மிதுனராசி அன்பர்களே!
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாள் களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். எதிர்பாராத பயணங்களும் அதனால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். அவர்களால் எதிர்பாராத பணவரவும் கிடைக்கக்கூடும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் உங்களுக்கு அனுசர ணையாக நடந்துகொள்வார்கள். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவிஉயர்வு கிடைக்கும். நிர்வாகத்தினரின் பாராட்டுகள் உற்சாகம் தரும்.
வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளிடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்படவும் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,30
அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் – உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனைமுகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை
கடகம்:
கடகராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்தி தருவதாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் வருகை ஆதாயமும் மகிழ்ச்சியும் தருவதாக இருக்கும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம்.
அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்பு பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும். ஆனாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 27,31
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவலர் பவளமேனி ஒளிநீறணிந்து உமையோடும் வெள்ளை விடைமேன்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி திசை தெய்வ மானபலவும்
அருநெறி நல்லநல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே.
சிம்மம்:
சிம்மராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. மற்றவர்களின் தலையீடு காரண மாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை யைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். வழக்குகளில் பொறுமை அவசியம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும்.
அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது.
வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.பங்குதாரர்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 29,30
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4
சந்திராஷ்டம நாள்கள்: 12,13 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைகண்டு ; அயலான் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்து காப்பான்
கன்னி:
கன்னிராசி அன்பர்களே!
பணவரவுக்கு குறைவில்லை. சகோதர வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும். சில ர் கடன் வாங்கவும் நேரிடும். பயணங்களின்போது கொண்டு செல்லும் உடைமைகளைப் பாது காப்பாக வைத்துக்கொள்ளவும். தாயாரின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். உறவினர் சிலரின் தலையீடு காரணமாக குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,30
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
சந்திராஷ்டமம்: 26 முதல் 27 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
துலாம்:
துலாராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். இளைய சகோதரர்களால் செலவுகள் ஏற்படும். வெளியில் உண்பதையோ நேரம் தவறி உண்பதையோ கண்டிப்பாகத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படக்கூடும்.
அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதிகாரிகள் சில நேரங்களில் கண்டிப்பாகப் பேசினாலும் அனுசரணையாகவும் இருப்பார்கள்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்கு தாரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 31, நவ 1
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சந்திராஷ்டமம்: 27 இரவு முதல் 28, 29 இரவு வரை
வழிபடவேண்டிய தெய்வம்: பழநியாண்டவர்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.
அமரரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
விருச்சிகம்:
விருச்சிகராசி அன்பர்களே!
பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலஙகளைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளை கள் மூலம் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கை யாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வங்கிக் கடனுதவி கிடைக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஆனால், எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 26,28
அதிர்ஷ்ட எண்கள்: 4, 9
சந்திராஷ்டமம்: 29 இரவு முதல் 30,31,நவ 1 அதிகாலை வரை
வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புணைந்த
அணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே அமரர்தம் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே
தனுசு:
தனுசுராசி அன்பர்களே!
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதி திருப்தி தரும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறு பாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களைக் கண்டிக்காமல் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்று கூடிவரும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.
புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபடவேண்டி வரும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்கள் உதவி செய்வார்கள்.
அதிர்ஷ்ட நாள்கள்: 26,28
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
சந்திராஷ்டமம் : நவ 1 அதிகாலை முதல்
வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயான் திருநிறே!.
மகரம்:
மகரராசி அன்பர்களே!
பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். நெருங் கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். நீண்டநாள்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் மூலம் பணவரவுக்கும் பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் இப்போது வேண்டாம். சக வியாபாரிகளின் பேச்சைக் கேட்டு புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,31
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்தனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.
கும்பம்:
கும்பராசி அன்பர்களே!
வார முற்பகுதியில் நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். குடும்ப விஷயத்தில் மற்றவர் களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் கருத்துவேறு பாடு ஏற்படக்கூடும் என்பதால், அவருடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். உங்களுடைய சமயோசிதமான ஆலோ சனை பெரிதும் பாராட்டப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும்.
வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூல மாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
அதிர்ஷ்ட நாள்கள்: 27,31
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
வழிபடவேண்டிய தெய்வம்: முருகன்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
மீனம்:
மீனராசி அன்பர்களே!
அதிர்ஷ்டம் தரும் வாரம். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்கு கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். தேவையான கடனுதவியும் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நாள்கள்: 28,30
அதிர்ஷ்ட எண்கள்:4, 9
வழிபடவேண்டிய தெய்வம்: வேங்கடேச பெருமாள்
பரிகாரம்: தினமும் காலையில் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே
