பிரேசில் அதிபர் தேர்தலில் 4வது முறையாக லூயிஸ் இனாசியோ வெற்றி; அதிபர் டிரம்பின் நண்பர் தோற்கடிப்பு

ரியோ டி ஜெனிரோ: பிரேசில் நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும், முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சோனாரோவின் மூத்த மகன் பிளாவியோ போல்சோனாரோவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. பிளாவியோ போல்சோனரோ அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராவார்.

பணவீக்கம், வாழ்க்கைச் செலவு உயர்வு, பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில் நடந்த இந்தத் தேர்தலில், லுலா டா சில்வா 51.21 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். போல்சோனாரோ 48.79 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் பிரேசிலின் அதிபராக தொடர்ச்சியாக 4வது முறையாக தேர்வாகியுள்ளார்.

இந்த வெற்றியை லூலாவின் ஆதரவாளர்கள் ரியோ டி ஜெனிரோ, சாவ் பாலோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

லத்தின் அமெரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார நாடான பிரேசிலில் மீண்டும் இடதுசாரி ஆட்சி தொடர்கிறது. இந்த ஆட்சியில் அமெரிக்காவுடனான வர்த்தகக் கொள்கைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link