சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்த தாய்க்கிழவி திரைப்படத்தை, அதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். இந்த திரைப்படத்தை சிவா கூடுமான அளவிற்கு செலவு இல்லாத வகையில் தயாரித்துள்ளார். அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகள் , பெரிய தொழில் நுட்ப கலைஞர்கள் , அதிக செலவு கொண்ட பாடல் காட்சிகள் , சண்டைக் காட்சிகள் , பெரிய செட்கள் ஆகிய எதுவும் இந்த திரைப்படத்தில் இடம்பெறவில்லை. இந்த திரைப்படத்தைப் பொறுத்தவரையில் ராதிகா மட்டுமே குறிப்பிடும் வகையில் சம்பளம் வாங்கிய நடிகை. படத்தின் திரைக்கதையும், ஒவ்வொரு காட்சிகளும் , சுவாரசியமாக இருந்தது படத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது.
நேற்று ஊடக சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன் ,”ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது சந்தோஷமான விஷயம். பெரிய படம், சின்ன படம் என்று பட்ஜெட்டை வைத்து பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், பெரிய படமா? சிறிய படமா? என்று படத்தின் வெற்றி தான் முடிவு செய்கிறது. நிறைய சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெற்றி பெறும் போது, அது பெரிய படங்களுக்கும் பிளஸ் ஆக அமையும். புதிய தொழில்நுட்ப வல்லுனர்கள், திறமையான கலைஞர்கள் இயக்குனர்கள் சினிமாவிற்குள் வருவதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும்.
