Chennai News Live Updates: செம்பரம்பாக்கம் ஏரி; முதல்வர் விஜய் இன்று ஆய்வு

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.99.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உருவாகிறது அர்னாப் புயல்: வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கும்; புயலாக மாறியதும் அர்னாப் என பெயர் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று, 28-ஆம் தேதி அதி தீவிர புயலாக இந்த அர்னாப் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

  • Oct 26, 2026 10:33 IST

    மலைச்சாலையில் வெள்ளம்

    தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலைச்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் மலைப்பாதையில் பாயும் வெள்ளம்; சுற்றுலா செல்வதை தவிர்க்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

  • Oct 26, 2026 10:33 IST

    “லஞ்சமில்லா துறை” – அமைச்சர் ஆனந்த்

    பல ஆண்டுகளாக இல்லாத வகையில் லஞ்சமில்லாத கல்வித்துறையை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பாக நிர்வகித்து வருகிறார்; ராஜ்மோகன் தமிழக வெற்றிக் கழகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் ஆனந்த் தெரிவித்துள்ளார். 

  • Oct 26, 2026 10:31 IST

    பட்டிமன்றத்தில் பேசிய என்னை சட்டமன்றத்தில் பேச வைத்தவர் என் தலைவர் – அமைச்சர் ராஜ்மோகன்

    “பட்டிமன்றத்தில் பேசிய என்னை சட்டமன்றத்தில் பேச வைத்தவர் என் தலைவர். மக்களுக்கு உண்மையாக இருப்பேன்; இந்த அலுவலகத்திற்கு மனுவுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி, பணத்துடன் வருபவர்களுக்கு இல்லை” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். 

  • Oct 26, 2026 10:29 IST

    2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

    அர்னாப் புயல் எதிரொலியாக சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

  • Oct 26, 2026 10:29 IST

    தீயினால் ஒரு பைக்கில் வந்த இருவர் உடல் கருகி பலி

    கிருஷ்ணகிரி மத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 பைக்குள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தீயினால் ஒரு பைக்கில் வந்த இருவர் உடல் கருகி பலி; மற்றொரு பைக்கில் வந்த இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

  • Oct 26, 2026 10:24 IST

    உருவாகிறது அர்னாப் புயல்

    வங்க கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவெடுக்கும்; புயலாக மாறியதும் அர்னாப் என பெயர் சூட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை தீவிர புயலாக மேலும் வலுப்பெற்று, 28-ஆம் தேதி அதி தீவிர புயலாக இந்த அர்னாப் புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

  • Oct 26, 2026 10:24 IST

    பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சி.என்.ஜி எரிவாயு விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது; அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.76-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் மற்றும் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.99.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source link