-நமது சிறப்பு நிருபர்-
கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்தின. ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலர் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீதான அமெரிக்காவின் போர் தற்போது தணிந்தாலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. தொடர்ந்து இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்துவதாக மிரட்டி வருகின்றன.
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தில் நடந்த குடியரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், ”அமெரிக்கா உடன் ஒப்பந்தம் செய்யத் தவறினால், ஈரான் மீதான மிகப் பெரிய ராணுவத் தாக்குதலை மீண்டும் நடத்தப்படும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
இன்று (அக்டோபர் 26) ஈரான் மீதான புதிய தாக்குதலை நிராகரித்து உள்ளார். தாக்குதல் எதுவும் நடக்காது என தெளிவுப்படுத்தினார்.
