ராமாயணா: ராமர் கல்யாணத்துக்கு இஸ்லாமிய ‘கவ்வாலி’ இசையா?: ஏ.ஆர். ரஹ்மானை விளாசும் ரசிகர்கள்

ராமாயணா பாடல்: நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரூ. 4 ஆயிரம் கோடி செலவில் உருவாகியிருக்கும் ராமாயணா படம் நவம்பர் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராமர் ரன்பிர் கபூர் , சீதை சாய் பல்லவி திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட மங்கல் ரங் பாடல் வெளியானதில் இருந்து ஏ.ஆர். ரஹ்மானை தான் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விளாசுகிறார்கள்.

சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறியிருப்பதாவது, ராமருக்கும், சீதைக்கும் கல்யாணம் நடக்கும் பாடலுக்கு இஸ்லாமிய பக்தி இசையான கவ்வாலியை பயன்படுத்தியிருக்கிறார் ரஹ்மான். அது சரி ராமாயணாவுக்கு அல்லா ராக்கா ரஹ்மானை இசையமைக்கச் சொன்னால் கவ்வாலியை தானே கொடுப்பார்.

ரஹ்மான் ட்ரோல்: ராமாயணாவில் கவ்வாலி இசை இருக்கும் என யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து அதிருப்தி அளித்து வருகிறார். 5 நேரம் தொழும் நபரை இசையமைக்கவிட்டதால் அவர் குன் ஃபயகுன் ஃபயகுன் இசையை கொடுத்திருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான் இல்லை மாறாக அஜய் அதுலை ராமாயணாவுக்கு இசையமைக்க வைத்திருக்க வேண்டும். ரூ. 4 ஆயிரம் கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தை சாய் பல்லவியும், ஏ.ஆர். ரஹ்மானும் சேர்ந்து நாசம் செய்துவிட்டார்கள். குன் ஃபயகுன் மட்டும் அல்ல அஜித் குமார், தபு, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோர் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பட பாடலான சந்தன தென்றலுக்கும், மங்கல் ரங்குக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சபாஷ் ரஹ்மான், சபாஷ் என தெரிவித்துள்ளனர்.

யார் என்ன திட்டினாலும் சரி, மங்கல் ரங் பாட்டு எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கேட்டதும் மனதில் ஒட்டிக் கொண்டது. இனி திருமண வீடுகளில் மங்கல் ரங் பாடல் தான் கேட்கும். ஏ.ஆர்.ரஹ்மான் ஏ.ஆர். ரஹ்மான் தான். என்ன அருமையாக இசையமைத்திருக்கிறார். ராமர், சீதைக்கு இதை விட சிறப்பாக ஒரு டியூன் போட முடியாது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரஹ்மான் ரசிகர்கள்.

சாய் பல்லவி விமர்சனம்: இசை சரியில்லை என்றால் ஏ.ஆர். ரஹ்மானை திட்ட வேண்டியது தானே இந்த இந்தி ரசிகர்கள். அது என்ன சந்து கேப்பில் எங்கள் சாய் பல்லவியையும் சேர்த்து திட்டுகிறார்கள் என அவரிகள் ரசிகர்கள் கேட்கிறார்கள். ராமாயணா ட்ரெய்லரில் சாய் பல்லவியை பார்த்ததில் இருந்தே அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இந்தி சினிமா ரசிகர்கள்.

சூர்ப்பனகையாக நடிப்பதற்கு பொருத்தமானவரை போய் புனிதமான மற்றும் அழகான சீதா தேவியாக நடிக்க வைத்திருக்கிறார்கள். சாய் பல்லவிக்கு பின்னால் நிற்கும் பெண்கள் கூட அவரை விட அழகாக இருக்கிறார்கள். சீதாவுக்கு கூர்மையான மூக்கு, ஆனால் சாய் பல்லவிக்கோ சூர்ப்பனகை மாதிரி மூக்கு.அதற்கு சூர்ப்பனகை ரகுல் ப்ரீத் சிங்கை சீதாவாக நடிக்க வைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று விளாசினார்கள், விளாசுகிறார்கள்.

என் கதைக்கு ஏற்ற சீதை சாய் பல்லவி என இயக்குநர் நிதேஷ் திவாரி முடிவு செய்து நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் ரசிகர்களோ சாய் பல்லவியின் உருவத்தை கிண்டல் செய்கிறார்கள். மேலும் ராமாயணா படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது சாய் பல்லவியே என்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ரசிகரின் கனவு: இதற்கிடையே தான் ராமாயணாவுக்கு இசையமைப்பதை அமெரிக்காவில் வசிக்கும் ரசிகர் ஒருவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு கனவில் கண்டதாக கடந்த வாரம் சென்னையில் நடந்த ராமாயணா இசை நிகழ்ச்சியில் தெரிவித்தார் ஏ.ஆர். ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link