மீண்டும் இணையும் நட்சத்திரங்கள் :
ரஜினிகாந்தும் நயன்தாராவும் ஏற்கெனவே ‘சந்திரமுகி’, ‘குசேலன்’, ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ‘சிவாஜி’ திரைப்படத்தின் ‘பல்லேலக்கா’ பாடலிலும் நயன்தாரா சிறப்புத் தோற்றத்தில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், ‘தர்மன்’ படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.
ரஜினிகாந்தின் திரை ஆளுமையும் நயன்தாராவின் நடிப்புத் திறனும் இணையும் இந்தப் படத்தில், நயன்தாராவின் கதாபாத்திரம் எத்தகைய முக்கியத்துவம் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும், அவரது கதாபாத்திரத்தின் பெயர், கதையின் முழுமையான விவரங்கள் போன்றவற்றை படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
நட்சத்திரப் பட்டாளமும் தொழில்நுட்பக் குழுவும்!
இப்படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளியான முதல் தோற்றம் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தது. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவையும், பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைப்பவர்கள் புகழ் பெற்ற இரட்டை ஸ்டண்ட் மாஸ்டர் களான அன்பறிவ் ( Anbariv) ஆவர்..
படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். தற்போது நயன்தாராவின் வருகை உறுதியாகியிருப்பதால், படத்தின் அடுத்தகட்டப் பணிகள் குறித்த தகவல்களையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் நயன்தாரா வெறும் கௌரவத் தோற்றத்தில் மட்டும் அல்லாமல் கதையின் திருப்புமுனைக்கு காரணமான ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.. அண்மையில் இப்படத்தின் 3 வது கட்ட படப்பிடிப்பு மைசூரில் வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது..
