இந்த வாரம் பேங்க் பக்கம் ஏதாச்சும் முக்கியமான வேலையா போக பிளான் பண்ணியிருக்கீங்களா? அப்போ இந்தச் செய்திய கொஞ்சம் கவனமா படிச்சுக்கோங்க! அக்டோபர் 26 முதல் 31 வரையிலான இந்த வாரத்துல, எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, பிஎன்பி உள்ளிட்ட பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை வருதுன்னு இந்திய ரிசர்வ் வங்கி காலண்டர் சொல்லுது.
வழக்கமா மாசத்தோட 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகள், அப்புறம் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறைதான். ஆனா, இந்த வாரம் சில ஊர்கள்ல உள்ளூர் பண்டிகைகள் மற்றும் சிறப்பு நாட்களுக்காகவும் வங்கிகள் மூடப்பட போகுது.
எந்தெந்த தேதியில்… எங்கெல்லாம் விடுமுறை?
இந்த விடுமுறை இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி இருக்காது. அந்தந்த மாநில உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஊர்கள்ல மட்டும் தான் பேங்க் லீவு.
அக்டோபர் 26 (திங்கள்): லட்சுமி பூஜை, மகரிஷி வால்மீகி ஜெயந்தி மற்றும் அக்சஷன் டே முன்னிட்டு அகர்தலா, சண்டிகர், ஜம்மு, சிம்லா, ஸ்ரீநகர் ஆகிய ஊர்கள்ல பேங்க் வேலை செய்யாது.
அக்டோபர் 29 (வியாழன்): கர்வா சௌத் பண்டிகையை முன்னிட்டு சிம்லாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.
அக்டோபர் 31 (சனி): சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தியை முன்னிட்டு அகமதாபாத்ல பேங்க் இயங்காது.
பேங்க் லீவுனா ஆன்லைன் சேவை வேலை செய்யுமா?
நேரடியா பேங்க் கிளைக்கு போய் செய்யுற வேலைகள் மட்டும்தான் விடுமுறை நாளில நடக்காது. ஆனா, மொபைல் பேங்கிங், ஜிபே, போன்பே மாதிரியான யு.பி.ஐ சேவைகள் 24 மணி நேரமும் வழக்கம் போல வேலை செய்யும். ஆன்லைன் மூலமா பணம் அனுப்பலாம், பெறலாம்.
அதேபோல ஏடிஎம் மையங்கள்ல பணம் எடுக்கவோ அல்லது கார்டு சேவைகளைப் பயன்படுத்தவோ எந்த தடையும் இருக்காது. நெட் பேங்கிங் மூலமா (NEFT, RTGS) பரிவர்த்தனைகள் அல்லது காசோலை (Cheque) கோரிக்கைகளையும் நீங்க எப்பவும் போல கொடுத்துக்கலாம்.
நவம்பர் 2026 வங்கி விடுமுறைகள் – ஒரு பார்வை
அடுத்த மாசமான நவம்பர்லயும் பண்டிகைகள் அதிகமா வரதால நிறைய நாட்கள் பேங்க் விடுமுறை வருது.
நவம்பர் 1 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவம்பர் 8 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவம்பர் 9 (திங்கள்) – தீபாவளி / லட்சுமி பூஜை / கோவர்தன பூஜை: அகர்தலா, போபால், சண்டிகர், கேங்டாக், இம்பால், ஜெய்ப்பூர், கான்பூர், லக்னோ ஆகிய இடங்கள்ல விடுமுறை.
நவம்பர் 10 (செவ்வாய்) – விக்ரம் சம்வத் புத்தாண்டு / பலி பிரதிபதா: அகமதாபாத், பெங்களூரு, டேராடூன், கேங்டாக், மும்பை, நாக்பூர் போன்ற ஊர்கள்ல பேங்க் மூடியிருக்கும்.
நவம்பர் 11 (புதன்) – பாய் தூஜ் / சித்ரகுப்த ஜெயந்தி: கேங்டாக், இம்பால், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, சிம்லா.
நவம்பர் 13 (வெள்ளி): ஷில்லாங்கில் வங்காலா திருவிழா விடுமுறை.
நவம்பர் 14 (சனிக்கிழமை): 2வது சனிக்கிழமை – இந்தியா முழுவதும் பேங்க் லீவு.
நவம்பர் 15 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவம்பர் 16 (திங்கள்): பாட்னா, ராஞ்சியில் சாத் பூஜை விடுமுறை.
நவம்பர் 20 (வெள்ளி): டேராடூனில் இகாஸ்-பக்வால் விடுமுறை.
நவம்பர் 22 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
நவம்பர் 23 (திங்கள்): ஷில்லாங்கில் செங் குட் ஸ்னெம் பண்டிகை லீவு.
நவம்பர் 24 (செவ்வாய்) – குருநானக் ஜெயந்தி / கார்த்திக பூர்ணிமா: புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, சென்னை தவிர்த்த பல முக்கிய நகரங்களில் விடுமுறை.
நவம்பர் 27 (வெள்ளி): பெங்களூரில் கனகதாச ஜெயந்தி விடுமுறை.
நவம்பர் 28 (சனிக்கிழமை): 4வது சனிக்கிழமை – இந்தியா முழுவதும் விடுமுறை.
நவம்பர் 29 (ஞாயிறு): நாடு முழுவதும் விடுமுறை.
முக்கிய குறிப்பு: இது பொதுவான விழிப்புணர்வுக்கான தகவல் மட்டுமே. உங்களோட உள்ளூர் வங்கி கிளையின் விடுமுறை விவரங்களை தெரிஞ்சுக்க, ஆர்பிஐ அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது உங்க வங்கியை நேரில் தொடர்புகொள்ளவும்.
